தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு நாளுக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியையே, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அந்த விதத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அந்த வகையில் அட்சய திருதியை முன்னிட்டு, நகைகடைகள் தங்கம், வெள்ளி மட்டும் வைரம் போன்ற நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இதனையடுத்து பவுனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, பழைய நகைகளுக்கு கூடுதல் விலை மற்றும் செய்கூலி, சேதாரம் தள்ளுபடி,கேஷ்பேக் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை :
தமிழகத்தில் அட்சய திருதியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகளில் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அந்த வகையில் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் நகைகளை வாங்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்துக்கு முன்பே 75 சதவீத தொகையை செலுத்தி பலர் முன்பதிவு செய்து கொண்டு நகைகளை வாங்கி சென்றனர். மேலும் விதவிதமான டிசைன்களில் நகைகள் அட்சய திருதியை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் தங்களுக்கு பிடித்த தங்கம் மற்றும் வைரம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் தேர்வு செய்து மகிழ்ச்சியுடன் அணிந்துக்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை 2024 ! ஆன்லைன் விண்ணப்பபதிவு தொடக்கம் !
இந்நிலையில் தங்க நகைக்கடைகளில் மிக அதிக அளவிலான விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14,000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.