அழகர் எதிர்சேவை 2024. சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர்சேவை என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
அழகர் எதிர்சேவை 2024
சுதப முனிவர் திருமலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும் போது எதிர்ப்பட்ட துருவாசர் முனிவரை கவனிக்காமல் இருப்பதை கண்டு, கோபமுற்ற துருவாசர் சுதப முனிவரை மண்டூகமாக மாறும்படி சாபமிட்டார். அதவாது தவளையாக மாறும் சாபமிட்டார். சாபம் நீங்க சுதப நீங்க சுதப முனிவர் வைகை ஆற்றில் தவளை வடிவத்தில் நீண்டகாலம் தவம் இயற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார்.
தேவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தர பாகு என்று வடமொழியிலும், அழகர் மாலிருஞ்சோலை நம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார். கோவில் பிரகாரத்தில் உள்ள ஜூவால யோக நரசிம்மர் பிரசித்தி பெற்றதாகும். இவர் உக்ர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்ரத்தை தணிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதிலியவைகளால் திருமஞ்சனம் நடைபெறுகிறது. யோக நரசிம்மரின் கோபத்தை தணித்து சாந்தி அடைய சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிகூரை திறந்த நிலையில் உள்ளது. மற்ற விஷ்ணு கோவில்களில் நரசிம்மர் மூலவரின் இடது ஓரத்தில் இருப்பார், இங்கு நரசிம்மர் மூலவருக்கு நேர் பின்புறம் உள்ளார்.
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நெய்வைத்தியம் செய்யப்படுகிறது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கு நடத்தப்படும் தைல பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை 6 மாத காலத்திற்கு
நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உட்சவரை மட்டும் தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
பொதுக்கூட்டம்.., நடைபயணம் என இருந்த தமிழ்நாட்டில் ! பாஜக புதுவிதமான தேர்தல் பிரச்சாரம் – இது வாக்காக மாறுமா ?
ஒருமுறை நியாயஸ்தரான எமதர்ம ராஜனுக்கே சாபம் ஏற்பட்டது, இந்த சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோவில் இருக்கும் அழகர் மலைக்கு வந்தார். விருசுபகிரி எனும் பெயர் கொண்ட இம்மலையில் தவம் கொண்டார். இந்த மலை தொடர் திருப்பதி போல ஏழு மலைகளைக்கொண்டது. தர்ம ராஜனின் தவத்தை மெச்சி பெருமாள் கட்சி தந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்ம ராஜன் பெருமாளிடம் தினமும் உன்னை ஒருமுறையாவது பூஜை செய்ய வரம் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெருமாளும் வரம் தர, இன்றும் இக்கோவிலில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம் உள்ளது.
எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய தர்மராஜனின் விருப்பத்தின் பெயரில் இங்கேயே திருமால் எழுந்தருளியுள்ளார். விஷ்வகர்மாவால் இங்கு சோமசந்த விமானம் அமைக்கப்பட்டது. சங்கு, சக்கரம், கதை, வில், வாள்தாங்கிய நிலையில் நின்ற கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.
அழகர் மலை என்பது, மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதில், அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோவில் கொண்டிருப்பதால் இது, அழகர் மலை என்று சொல்லபப்டுகிறது.