கள்ளழகர் எழுந்தருளும் வைகை ஆற்றில் 2400 பேருக்கு மட்டுமே அனுமதி? – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அதில் நடக்க இருக்கும் கள்ளழகர் திருவிழாவின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும், மொபைல் சேவையும், குடிநீர், உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில், வைகை ஆற்றில் இரண்டு பகுதிகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் இம்முறை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர மருத்துவமனை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தாழ்வாக செல்லும் மின் கம்பங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் நீதிமன்றத்தை திருப்தி அடைய வைத்திருந்தாலும், இந்த நீதிமன்றம் ஒரு நிபந்தனையை முன் வைத்துள்ளது. அதன்படி நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கு பொழுது கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டிருக்கும் 2000 பாஸ்கள் மற்றும் 400 பேட்ச் அணிந்தவர்கள் என மொத்தம் 2400 பேர் மட்டுமே வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.