Home » செய்திகள் » உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?

மதுரையில் வெகுவிமர்சையாக நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025 பரிசு பொருட்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் 2025  பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், நேற்று மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, இன்று காலை 7 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி இந்த போட்டிக்கான பல ஏற்பாடுகள் அரசு சார்பாக செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதன்படி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், சிறந்த காளைக்கு முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் ஒரு டிராக்டரும் வழங்கப்பட இருக்கிறது. அது போக காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காமல் திமிறிய காளைகளுக்கும் தங்கம் வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது. அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் நவீன் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அனைவரது மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி 2025! சென்னை ஐஐடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (17.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

குழந்தை பெறும் தாய்மார்களுக்கு 81 ஆயிரம் உதவித்தொகை .., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக கட்சி போட்டி?.., புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top