தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு தொடர்பாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
TVK VIJAY:
கடந்த சில வருடங்களாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படங்களை எடுத்து வருகின்றனர். அதன்படி, இந்த வருடம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் இதற்கு உதாரணம். அந்த வகையில், தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகள் முதல் விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த கழிவுகளால் என்னென்ன ஆபத்து மக்களுக்கு ஏற்படும் என்பது குறித்து உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!
இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று இந்தப் படத்திற்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது ‘அலங்கு’ திரைப்படம் இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், ரிலீசை ஒட்டி படக்குழுவினர் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்து, படத்தின் ட்ரெய்லரை காண்பித்துள்ளனர். இதையடுத்து படக்குழு தளபதியுடன் உரையாடியுள்ளனர். அதன் பின்னர், புத்தகம் ஒன்றில் கையெழுத்திட்ட நடிகர் விஜய், “அலங்கு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள், பிரியமுடன் விஜய்” என குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும் நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!
இது சம்பந்தமான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்தப் படத்தை ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ படங்களை இயக்கிய S.P. சக்திவேல் தான் இயக்கியுள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!
விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!