Home » செய்திகள் » தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து – வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து – வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து - வெளியான ஷாக்கிங் தகவல்!!

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து: தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்நாளில் மக்கள் வாக்குப்பதிவு செய்ய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வாக்குப்பதிவு செய்ய குழந்தைகளுடன் செல்ல வேணாம் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் அன்று ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்க உழியர்களுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து
தமிழகத்தில் இந்த நாளில் அனைத்து திரையரங்களிலும் 2 காட்சிகள் ரத்து

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடக்க இருக்கும் தேர்தல் அன்று திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுவதாகவும் அதே போல் மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் டூவீலரில் சென்ற பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் Fine? – 270 முறை Traffic Rules மீறியதாக புகார்!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top