கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?

கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அல்லு அர்ஜுன். இவரது கேரியரில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் முக்கியமான படம் தான் புஷ்பா. கடந்த 2021-ல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், புஷ்பா தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளிவர இருக்கிறது. இதனை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன் சென்னை தாம்பரத்தில் புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் தமிழில் பேசி அசத்தினார். அதுமட்டுமின்றி, அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பல முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் ஜெயிலர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய நெல்சனிடம் எப்போது அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து படம் எடுக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், ” எனக்கு அவருடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாத ஒரே காரணத்தால் தான் அவரிடம் கதை சொல்லாமல் இருக்கிறேன். ஆனால் இப்போது அவர் பேசிய தமிழை பார்த்து கண்டிப்பாக கதையை கூறுவேன் என்று கூறியுள்ளார். இதற்கு அல்லு அர்ஜுனும், கை காட்டி சிக்னல் கொடுத்துள்ளார். எனவே இதை வைத்து பார்க்கும்போது, கண்டிப்பாக அவர் தமிழில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

AR ரஹ்மான் டைவர்ஸ் விவகாரம் – நான் என் கணவனை பிரிய நினைக்கவில்லை – சாய்ரா பானு ஷாக்கிங் தகவல்!
அஜித்தின் Good Bad Ugly படத்தில் இணைந்த ஜி.வி பிரகாஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் விலகல் !
பிக் பாஸில் கடைசி நேரத்தில் மாறிய Eviction கார்டு – பலியாடான வர்ஷினி – உண்மையை உடைத்த பிரபலம்!
இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை தேவயானி – மியூசிக் போட்ட இசைஞானி இளையராஜா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *