சமீபத்தில் வெளியான புஷ்பா படம் ஹிட் அடித்த நிலையில் தற்போது ஹீரோ அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல்:
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் இந்த வசூல் தற்போது ஓயாமல் தொடர்ந்து வாரி குவித்து வருகிறது. இதற்கிடையில் திரைப்படத்தை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் மரணம் அடைந்த நிலையில் அவரது மகனும் படுகாயம் அடைந்து தற்போது மூளைச்சாவு ஏற்பட்டது.
புஷ்பா அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.., 8 பேர் அதிரடி கைது!!
இது பெரும் சர்ச்சையை கிளப்பி வந்தது. இதனால் அல்லு அர்ஜுனை காவல்துறை கைது செய்த கொஞ்ச நேரத்தில் அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆனார். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் மீது கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அல்லு அர்ஜுன் அதற்கு தன்னுடைய புகழ் மற்றும் நற்பெயரை சீர்குலைக்கும் செயல்கள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!
இந்த நிலையில், நேற்று அல்லு அர்ஜுன் வீட்டிற்கு முன்பு வந்த திடீரென மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை செய்து வந்தது. அதன்படி இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, அல்லு அர்ஜுன் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!
பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் – ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு