நேற்று ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால். தமிழில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவர் நடித்த “மைனா” திரைப்படம் தான் அவரை அடையாளம் காட்டியது. அதன் பின்னர் தொடர் வெற்றிப்படங்கள் குடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்
கடந்த 2014 ம் ஆண்டு அமலா பாலும், டைரக்டர் விஜயும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி இரண்டே வருடத்தில் அவர்கள் காதல் விவகாரத்தில் முடிந்தது. அதன் பின்னர் படங்களில் நடிப்பதை அமலா பால் குறைத்தார். பின்னர் தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கர்ப்பம் ஆனார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் போட்டியா? – தவெக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
கர்ப்பமாக இருந்தாலும் தான் நடித்த படங்களின் ப்ரோமோஷன் விழாக்களில் பங்கு கொள்வது, தன் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது என்று தனது வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இவரின் வளைகாப்பு நிகழ்ச்சியும் கடந்த ஏப்ரல் மாதம் சூரத்தில் கோலாகலமாக நடந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையை தூக்கி சந்தோஷமடையும் வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியுட்டுள்ளார். தனது குழந்தைக்கு ‘இளாய்’ என பெயர் சூட்டியுள்ளனர் அமலா மற்றும் ஜெகத் தம்பதியினர். திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம்
அர்ஜுன் – தம்பி ராமையா வீட்டு கல்யாணத்தில் ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டாரா?
பிக்பாஸ் பிரதீப்க்கு விரைவில் திருமணம்? பொண்ணு யாருன்னு தெரியுமா?
சமந்தா போல அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி நடிகை
பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை