தீபாவளிக்கு வெளியாகி, தற்போது வரை தியேட்டரில் வெற்றி நடை போட்டுக் ஓடும் போதே அமரன் திரைப்படத்தின், OTT-யில் ரிலீசாகும் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரன் திரைப்படம்:
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் அமரன். ராணுவத்தில் பணியில் இருக்கும் உயிரை இழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
முதல் முறையாக நம் தேசத்திற்காக போராடி உயிர் நீத்த தலைவர் ஒருவரை பற்றி எடுக்கப்பட்டிருந்த படம் அமரன் என்பதால், இந்த படம் தமிழக மக்களை தாண்டி, மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, கமலின் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 29 நாட்களில், ரூ.322 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தில் சாய் பல்லவி நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
தியேட்டரில் ஓடும் போதே OTT-யில் ரிலீசாகும் அமரன் – எப்போது தெரியுமா?
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ – வெளியான மோஷன் போஸ்டர்!!
இதனால் இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆக போகும் நிலையில் தொடர்ந்து தியேட்டரில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் களமிறங்கிய கங்குவா வந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்து வருகிறார்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்