அமரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி தற்போது நடிகர் தனுஷ் D55ல் இணைந்த -தாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
Rajkumar Periyasamy:
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சேர்ந்து நடித்த திரைப்படம் தான் “அமரன்.” கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஏன் சொல்ல போனால் ரஜினி நடித்த வேட்டையன் படத்தை விட அதிக வசூலையும் வாரி குவித்தது. அதன்படி இப்படம் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும் நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!
இந்நிலையில் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி பிரபல நடிகருடன் கூட்டணி வைத்துள்ளார். அதாவது, நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் 55 வது படத்தை தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறாரா. மேலும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை விழாவில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ், வெற்றிமாறன் மற்றும் சில தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!
மேலும் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமரன் படம் போல் தனுஷ் 55 திரைப்படமும் ஒரு வீரரின் கதையாகத்தான் இருக்கும் என்று ஏற்கனவே இயக்குனர் தெரிவித்து இருந்தார். அமரன் படத்தில் நாட்டுக்காக உயிரை மாய்த்து கொண்ட முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தான் படமாக எடுக்கப்பட்டது. மேலும் நம் சமுதாயத்தில் பல வெளியில் தெரியாத நிறைய வீரர்கள் அல்லது ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய கதையாக D55 திரைப்படம் உருவாக உள்ளது என கூறினார். இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!
விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!
விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!