Breaking News: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்: அமர்நாத்தில் அமைந்துள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு வருடந்தோறும் உலகத்தில் உள்ள பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த ஜூன் 28ம் தேதி யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
மேலும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19ம் தேதி நிறைவடை இருக்கும் நிலையில், தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது நேற்று இரவு முதல் பல்டால் மற்றும் பஹல்காம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் இன்று அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Also read: திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட் – பல லட்சம் ரூபாய் பண மோசடி!
கனமழை குறைந்த பிறகு மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கும் என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு குகைக் கோயிலில் 4.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிகமான பக்தர்கள் குகைக் கோயிலில் பிரார்த்தனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை செம்மொழி பூங்காவில் உணவுத் திருவிழா
பாம்பன் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
என்னது பலூனுக்குள்ள தியேட்டரா? – தமிழகத்தில் எங்கு உள்ளது தெரியுமா?
உதகை குதிரை பந்தய மைதானம் மீட்பு