அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம். தமிழ்நாடு அரசு சார்பில் SC, ST பிரிவினர்களில் தொழில்முனைவோர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் என்றும், இது தமிழ்நாடு அரசின் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் :
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 1300 க்கும் மேற்பட்ட SC, ST பிரிவை சார்ந்த தொழில்முனைவோர்கள் பயனடைந்துள்ளனர் என்றும், இந்த சிறப்புத்திட்டத்தின் கீழ் சுமார் 134.86 கோடி ரூபாயை முதலீட்டு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்த 55 வயதிற்கு உட்பட்ட நபர்கள் 1.5 கோடி ரூபாய் கடனாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ! 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !
அத்துடன் தொழில்முனைவோர் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35% சதவீதத்தை முதலீட்டு மானியமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.