வானில் பறந்த விமானம்
சமீப காலமாக பறக்கும் விமானத்தில் ஏற்படும் கோளாறுகளால் பெரிய விபத்து வரை செல்லும் அளவிற்கு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்காவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு செல்லும் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று புறப்பட்டு சென்றது. கிட்டத்தட்ட அந்த விமானத்தில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த விமானம் டேக் ஆப் ஆன கொஞ்ச நேரத்திலே டயர் கீழே விழுந்தது. அதுமட்டுமின்றி இந்த டயர் ஆள் நடமாட்டம் இல்லாத ஊழியர்களின் பார்க்கிங்கில் விழுந்ததால் பெரிய விபத்து வரை செல்லவில்லை. ஆனால் இந்த விமானம் எப்படி தரையிறங்கும் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்தது. அதனால் வெகு நேரம் வானில் பறந்து கொண்டிருந்த விமானம், கிளம்பிய இடத்திலேயே தரையிறங்கியது. பாதையில் நின்றதால் அதை இழுத்து சென்றனர். மேலும் அதில் இருந்த பயணிகளுக்கு வேறு ஒரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி விமானத்தின் ஆறு டயரில் ஒன்று கீழே விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.