அமெரிக்காவில் நண்பனை இழந்த ஒரு பெண் ஹோட்டலில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு 8.3 லட்சம் டிப்ஸாக கொடுத்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8.3 லட்சம் டிப்ஸ்
அமெரிக்காவின் உள்ள மிச்சிகனில் இருக்கும் பேமஸ் உணவகங்களில் ஒன்றாக இருக்கும் மேசன் ஜார் கஃபே என்ற ஹோட்டலுக்கு மார்க் என்பவர் சென்று உணவருந்தி உள்ளார். அதாவது அந்த பெண் அங்கு 32.43 அமெரிக்க டாலர் மதிப்புக்கு (இந்திய மதிப்பில் ரூ.2700 ) சாப்பாடு வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபர் அங்கு வேலை பார்த்த ஊழியர்களுக்கு சேர்த்து டிப்ஸாக 10000 டாலர்( இந்திய மதிப்பில் 8.3 லட்சம்) கொடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதை பார்த்த ஊழியர்கள் இது கனவா இல்ல நினைவா? என்று நெகிழ்ச்சி அடைந்த நிலையில், இப்படி இவ்வளவு பணம் கொடுக்க என்ன காரணம் என்று ஊழியர்கள் அந்த நபரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ” சமீபத்தில் என்னுடைய நண்பன் இருந்துவிட்டேன். அவருக்காக தான் இந்த தொகையை வழங்கினேன். மேலும் அவரின் இறுதி சடங்கிற்காக தான் இங்கே வந்தேன். அவர் பெயரைச் சொல்லி நாலு பேர் வாழனும் என்ற நோக்கத்தில் தான் கொடுத்தேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டதும் ஊழியர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.