பெண்களுக்கு 2600 லிட்டர் தாய்ப்பால் தானம்: இந்த உலகத்தில் பல்வேறு விஷயங்களில் பெரும்பலான நபர்கள் உலக சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.
பெண்களுக்கு 2600 லிட்டர் தாய்ப்பால் தானம்
அதாவது பொதுவாக பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது முக்கியமான ஒன்று. தாய்ப்பால் மூலமாக தான் அந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி போன்றவை கிடைக்கிறது. எனவே குறைந்தது மூன்று வருடங்களுக்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று தாய்மார்களுக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இப்படி இருக்கையில் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சில பெண்கள் தாய் பாலை தானம் செய்து வருகின்றனர். அதன்படி உலகம் முழுவதும் தாய்ப்பால் தானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் கனமழைக்கு வாய்ப்பு – எந்த மாவட்டங்களில் தெரியுமா?
அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண் அலிஸ் ஒகில்ட்ரி என்பவர் இதுவரை 2600க்கும் அதிகமான லிட்டர் தாய்ப்பால் தானம் அளித்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு 1,569 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்?
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ – மருத்துவர்கள் கூறும் விஷயம் என்ன?
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்?