Home » செய்திகள் » அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ் - பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்?

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ்: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. அதன்படி தற்போது வரை இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுக்கு வந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து மக்களின் வாக்குகளை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் தொகுதியில் தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். தற்போது இந்த தொகுதியில் தான் தீவிரமாக பரப்புரை ஆற்றி வருகிறார். இந்நிலையில் இந்த தொகுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக போட்டியிடும் 16 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற சம்பவம் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் வாபஸ் பெற்ற காரணத்தை அறிந்த பலருக்கும் வியப்படைய வைத்துள்ளது. அதாவது பாஜக கட்சியினர் தங்களை வாபஸ் வாங்க சொல்லி தொடர்ந்து மிரட்டியதால் தான் நாங்கள் வாபஸ் வாங்கினோம் என்று எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் குற்றம் சாட்டியுள்ளனர். 

ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு  Happy நியூஸ்  – வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும்.. இங்கே செல்லலாம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top