மதுரை மாவட்டத்திற்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர் ஒட்டிய போஸ்டரில் இயக்குனர் சந்தான பாரதியின் படம் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமித்ஷாவுக்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஏழு நாட்களில் தொடங்க இருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலுக்கு இன்னும் ஏழு நாட்களே இருக்கும் நிலையில், அடுத்த ஆறு நாட்களுக்கு மட்டுமே மக்களிடம் வாக்குகளை சேகரிக்க பிரச்சாரம் மேற்கொள்ள முடியும். இதனால் வீடு வீடாக சென்று திமுக, அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் மக்களின் ஓட்டுக்களை சேகரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அந்த வகையில் தற்போது மதுரையில் பிரச்சாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வருகிறார். அவரின் வருகையையொட்டி பாஜக கட்சியினர் பல முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர் ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்ற இயக்குனர் சந்தான பாரதியின் படம் வைரலாகி வருகிறது. இந்து தொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.