Home » செய்திகள் » ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு – முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு – முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு - முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண அழைப்பிதழ் வெளியீடு. உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவிற்கான இரண்டாவது முன்வைபோகம் ஒரு சொகுசு படகில் நடைபெற இருக்கிறது. இந்த திருமண முன்வைபோக நிகழ்ச்சியில் பங்குபெற உலகின் பிரபலங்கள் பலரும் பாலிவுட் நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் சொகுசு படகு பயணம் இத்தாலியில் இன்று தொடங்கி பிரான்ஸில் ஜூன் 1 ஆம் தேதி முடிகிறது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவிற்கான முன்வைபோக அழைப்பிதழில் வாழ்க்கை ஒரு பயணம் என்ற வாசகத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி, நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் ஜோடி ஆகியோர் மும்பை விமான நிலையத்துக்கு வந்தனர். உலகம் முழுவதும் இருந்து 300 விஐபி விருந்தினர்கள் இதில் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம் – குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு அஜித் கலந்து கொள்வதாக தகவல் !

இதனையடுத்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் மும்பையில் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top