ஆந்திராவில் நெருங்கும் தேர்தல் – நான்கு கண்டெய்னரில் சிக்கிய 2 ஆயிரம் கோடி
ஆந்திராவில் நெருங்கும் தேர்தல் – நான்கு கண்டெய்னரில் சிக்கிய 2 ஆயிரம் கோடி:மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தற்போது ஆந்திர மாநிலத்தின் 175 சட்டமன்ற தொகுதிக்கும், 25 நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகிற மே 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நடக்க இருக்கும் இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் தான் போட்டி நிலவுகிறது. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பணப்படுவாடாவை தவிர்க்க தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் நான்கு கண்டெய்னர் லாரிகளில் 2 ஆயிரம் கோடி காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் கஜ்ராம்பள்ளியில் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு நான்கு கண்டெய்னர் லாரிகள் சென்றுள்ளது. அந்த நான்கு லாரிகளை சோதனை செய்து பார்த்த போது அதில் 2000 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த பணத்துக்கு RBI’யின் அனுமதி இருந்ததால் வாகன தணிக்கைக்கு பிறகு கண்டெய்னர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.