ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி. ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது இந்த சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடந்து சந்திர பாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆந்திரா சட்டமன்ற தேர்தல் :
இன்று மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், ஆந்திராவில் சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. தற்போது நடைபெற்ற தேர்தலில் அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு, பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து களமிறங்கினர்.
தெலுங்கு தேசம் கட்சி வெற்றி :
ஆந்திராவில் உள்ள மொத்தம் 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 130 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பவன் கல்யாண் கட்சி 20 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், பாஜக 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிவெறும் 19 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
ஜூன் 9 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு :
இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்ற நிலையில் ஜூன் 9 ஆம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!
இந்நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.