தற்போது ஆந்திராவில் முதன்முறையாக நீர்வழி விமான சேவை தொடக்கம், இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.
ஆந்திராவில் முதன்முறையாக நீர்வழி விமான சேவை தொடக்கம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆந்திரா :
ஆந்திராவில் புன்னமி காட் அருகே வரும் நவம்பர் 9 ஆம் தேதி ஆந்திர அரசு தொடங்கவுள்ள கடல் விமான சேவையின் தொடக்க விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன என்று விஜயவாடா மாநகராட்சி ஆணையர் எச்.எம். தியானசந்திரா தெரிவித்துள்ளார்.
கடல் விமான சேவை :
ஆந்திரா அரசின் கடல் விமான சேவை சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 9 ஆம் தேதி 10 இருக்கைகள் கொண்ட கடல் விமானம் நகரின் பிரகாசம் தடுப்பணையில் இருந்து நந்தியால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Union Aviation Minister K. Ram Mohan Naidu
இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச விமான நிலைய மேம்பாட்டுக் கழகம் (APADCL) இந்த திட்டத்தை மேற்பார்வையிடுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர். chandrababu naidu
சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் – தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு !
சிறப்பு ஏற்பாடுகள் :
இதனையடுத்து இருக்கை ஏற்பாடுகள், நுழைவுத் திட்டங்கள், குடிநீர் விநியோகம், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் விஜயவாடாவின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்சிடி திரைகளில் பொதுமக்களை நேரலையில் காண அனுமதிப்பது குறித்து சிறப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றன.