தடம் புரண்ட ரயில்
சமீப காலமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரயில் விபத்து தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு என்ற ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பயணிகள் ரயில் எஞ்சின் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. அதனால் ஏற்பட்ட சத்தால் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த விபத்து இரவு நேரத்தில் நடைபெற்றதால் தான், அங்கு வந்த ரயில்வே போலீஸ் இந்த விபத்து எதனால் நடந்தது என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி ரயில் தடம் புரண்டு போனதை சுதாரித்த லோகோ பைலட் உடனே ரயிலை நிறுத்தியதால் மட்டுமே பெரிய விபத்து நிகழாமல் போனதற்கு காரணம். மேலும் அதில் பயணம் செய்த மக்கள் பேருந்து, ஆட்டோ பிடித்து தாங்கள் நினைத்த இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.