ஆண்ட்ரியா
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாடகியாகவும், நடிகையாகவும் இருந்து வருபவர் தான் ஆண்ட்ரியா. தற்போது இவர் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கிடையில் அவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் ராக் ஸ்டார் அனிருத்தை காதலித்து வந்ததாகவும், சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆண்ட்ரியா முதல் முறையாக தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை, நான் தனியாக வாழும் வாழ்க்கைக்கு பழகி விட்டேன் “என தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நல்ல முடிவு தான் மேடம் 90s நாங்களும் தனியா தான் வாழ்கிறோம் என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.