
Breaking News: விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு: சோசியல் மீடியாவில் முக்கிய வெப் சைட்டாக இருந்து வருகிறது விக்கிபீடியா. இதில் சினிமா பிரபலங்கள் முதல் பல முக்கிய தலைவர்கள், நிறுவனங்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளது. இந்நிலையில் விக்கிபீடியா மீது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. அதாவது விக்கிபீடியா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த மனுவில் அவதூறு செய்தி வெளியிட்டதற்கு இழப்பீடாக ரூ.2 கோடி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விக்கிபீடியா பதில் அளிக்குமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பேசிய விக்கிபீடியா தரப்பினர், ஏஎன்ஐ நிறுவனம் போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் இருந்து ஏராளமான தகவல்களை வெளியிட்டு வருகிறது என்று தெரிவித்தது.
Also Read: ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்வர் முக ஸ்டாலின் – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
அதுமட்டுமின்றி சில நிகழ்வுகள் குறித்தும் மோசமான தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில், தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை சொல்ல விக்கிபீடியாவுக்கு முழு உரிமை இருக்கிறது. டெல்லி ஐகோர்ட்டில் விக்கிபீடியா விளக்கம் அளிக்கும் எனவும் நீதிபதி நவீன் சாவ்லா கருத்து தெரிவித்துள்ளார்.
25 பைசா தான் வேணும் – வங்கியில் அடம்பிடித்த நபர்
தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான பயணம் – அடுத்த மார்ச் மாதம் தொடக்கம் !