ஆன்மிக செய்திகள் ஜூன் 2024. முருகனின் வித்யாசமான கோலங்கள். தந்தைக்கு மந்திரம் உபதேசித்த முருகனின் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புடையது. முருகனது வித்தியாசமான காட்சிகளை பற்றி அறிந்துகொள்ள கீழே காணலாம். anmiga seithigal june 2024 in tamil.
ஆன்மிக செய்திகள் ஜூன் 2024
சங்கு சக்கர முருகன்:
திருமால் தான் சங்கு சக்கரத்துடன் காட்டாட்சி தருவார் என்று அறிவோம். ஆனால், திருமாலின் மருமகன் முருகனும் தன் மாமனான திருமாலை போல் சங்கு சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள் தரும் அறிய காட்சியை கும்பகோணத்திற்கு அருகே உள்ள அழகாபுத்தூரில் காணலாம்.
சதுர்முக முருகன்:
முருகனுக்கு ஆறுமுகம் என்பது நன்கு அறிந்த ஒன்றாகும். சில தலங்களில், ஒரு முகத்துடன் காட்சி தருவார் முருகப் பெருமான். ஆனால், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டியில் உள்ள தலத்தில் சதுர் முக முருகனாக நன்கு முகத்துடன் காட்சி தருவார்.
சேவல் ஏந்திய முருகன்:
கோவை அருகே உள்ள செஞ்சேரிமலையில் முருகன் சேவல் கொடிக்குப் பதிலாக சேவைலையே ஏந்தியுள்ளார். இதுபோல், முருகப் பெருமான் கிளி ஏந்திய காட்சியை கனககிரியில் உள்ள முருகன் கோவிலில் காணலாம்.
திருப்போரூர் முருகன்:
திருப்போரூரில், முருகன் வள்ளி தெய்வானையுடன் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவருக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. மூலவருக்கு திருவடியின் கீழ் உள்ள முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் இருக்கும் சிலைக்குத்தான் ஆராதனை மற்றும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பாம்பு வடிவத்தில் முருகன்:
கர்நாடகத்தில் “காட்டி சுப்ரமணியா” எனும் இடத்தில பாம்பு வடிவத்தில் முருகன் காட்சி தரும் கோவில் உள்ளது. இங்குள்ள பாம்புகள் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என கூறப்படுகிறது. அதுபோல, யாரும் இங்கு பாம்பை அடிப்பதும் இல்லை. murugan temple in tamilnadu.
வைகாசி மாதம் சுப முகூர்த்த நாட்கள் 2024 ! மே மற்றும் ஜூன் நல்ல நாட்களின் விபரங்கள் !
வில்லுடன் முருகன்:
திருவிடைக்கழி, மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை, வில்லுமையான் பட்டு, சாயக்காடு, விள நகர், அனந்தமங்கலம் திருமயிலாடி ஆகிய ஊர்களில் முருகன் ஒரு கையில் வில்லுடனும், மற்றொரு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.
மாம்பழ முருகன்:
மாம்பழத்துக்காக கோபபப்பட்டு முருகன் ஆண்டிக் கோலத்தில் அமர்ந்த இடம் பழனி. ஆனால், முருகன் கையில் மாம்பழத்துடன் இருக்கும் காட்சியை திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவிலில் காணலாம்.
குன்றத்தூர் முருகன்:
தென்தணிகை எனப் போற்றப்படும் குன்றத்தூரில் முருகனையும் வள்ளி தெய்வானையையும் ஒரே நேரத்தில் காண முடியாது. ஏனெனில், கருவறையின் அமைப்பு அப்படி. ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் வள்ளியுடனும், முறுபக்கத்தில் இருந்து பார்த்தால் தெய்வானையுடனும் முருகன் தெரிவார்.
வேடர் வேடத்தில் வேளாண்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சியில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். வள்ளியை மணம் செய்ய வேடன் வேடம் பூண்டவர் முருகன். இந்த வேடர் வடிவ முருகனுக்கு வியர்க்கும் என்பதே மிக வியப்பான செய்தியாகும்.
திருமலைக்கேணி முருகன்:
முருகன் கோவிலில் வள்ளி சுனை, தெய்வானை சுனை என்னும் நீர்நிலைகள் அருகருகே உள்ள கோவில் திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள திருமலைக்கேணி என்னும் ஊரில் அமைந்துள்ளது. தெய்வானை சுனையின் நீர் இரவு பகல் என எந்த நேரமும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின் நீர் இரவு பகல் என எல்லா நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது ஆச்சர்யம் அளிக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு தலத்திலும் முருகன் பல விதமாக காட்சி தந்தருள்கிறார். அதற்கேற்ப, அந்தந்த கோவிலில் அபிஷேகங்களும், ஆராதனைகளும் அதற்கு ஏற்ப செய்யப்பட்டுவருகிறது. murugan temple in kumbakonam.