பெண்கள் விரும்பும் பொருட்களில் ஒன்று தங்கம். இந்த தங்கத்தை கஷ்டப்பட்டு வாங்கி வீட்டில் வைத்தாலும் தங்குவது இல்லை. அடமானம் வைக்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இல்லை விற்கும் நிலை வந்துவிடுகின்றது. தங்க நகை வாங்க வேண்டும் என்று பணம் சேர்த்து வைப்பர். ஆனால் கடைசி வரை தங்கம் வாங்க முடியாது. நாம் என்ன செய்தலும் தங்கம் வீட்டில் தங்கவில்லையா ஸ்வர்ண தோஷம் இருக்கலாம். தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தங்கம் வீட்டில் தங்கவில்லையா ! ஸ்வர்ண தோஷம் இருக்கலாம் !
ஸ்வர்ண தோஷம் ஏற்பட காரணம் 1
ஆன்மீகத்தின் படி பூமியில் இருந்து எடுக்கும் அனைத்து பொருட்களுக்கும் தோஷம் உண்டு. எனவே தங்கம் வாங்கிய உடன் சில வழிமுறைகளை செய்த பின் தான் தங்கத்தினை நாம் பயன்படுத்த வேண்டும். தங்கம் வாங்கிய உடன் உப்பில் 1மணி நேரம் முதல் 1நாள் வரையில் மூடி வைத்த பின் நன்றாக துடைத்து பயன்படுத்தலாம். குலதெய்வத்திற்கு தங்கத்தினை சமர்ப்பித்த பின் நாம் பயன்படுத்த வேண்டும். நேரடியாக பயன் படுத்தும்போது தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஸ்வர்ண தோஷம் ஏற்பட காரணம் 2
நகை வைக்கும் இடங்களில் பச்சை கற்புரம் வைக்க வேண்டும். சிவப்பு நிற வெல்வெட் துணி அல்லது பட்டு துணியின் மேல் தான் நகை வைக்க வேண்டும். துளசி இலையை நகை வைக்கும் இடத்தின் அருகில் வைத்து பயன்படுத்த வேண்டும். இப்படி தங்கத்திற்கு உரிய மரியாதை தர வேண்டும். கண்ட இடத்தில் வைத்து எடுத்தால் தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஸ்வர்ண தோஷம் நீங்க பரிகாரம் :
நமக்கு ஒரு தோஷம் இருக்கின்றது என்றால் அதனை பரிகாரம் செய்து நீக்கி விடலாம். அதேபோல் நாம் வாங்கிய தங்கம் வீட்டில் தங்க பரிகாரம் செய்ய வேண்டும். தோஷம் நீங்க ” ஸ்வர்ண தோஷ ” பரிகாரம் செய்யும் போது தங்கம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரலாம்.
உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !
எங்கு செய்ய வேண்டும் :
ஸ்வர்ண தோஷ பரிகாரத்தினை கட்டாயம் முருகன் கோவிலில் வைத்து தான் பண்ண வேண்டும். நம் வீடுகளின் அருகில் இருக்கும் முருகன் கோவிலில் வைத்து பண்ணலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் முருகனுக்கு தனி சன்னதி இருக்கின்றது என்றாலும் அங்கு வைத்து கூட பரிகாரம் பண்ணலாம்.
தேவையான பொருட்கள் :
1. பால் குடம் எடுக்க பயன்படும் சின்ன பித்தளை குடம்
2. பச்சரிசி
3. பச்ச பயிறு
4. துவரம் பருப்பு
5. ஒரு தேங்காய்
6. செவ்வரளி பூ
7. வாழைப்பழம்
8. வெற்றிலை
9. கொட்டை பாக்கு
10. முருகனுக்கு பச்சை காட்டன் வேட்டி , துண்டு
11. புதிய அகல் விளக்கு – 6
12. புது திரி
13. நெய் / நல்லெண்ணெய்
14. மஞ்சள்
15. குங்குமம்
அளவு :
பித்தளை குடத்தின் பாதியளவிற்கு பச்சரிசி நிரப்ப வேண்டும். அதற்க்கு மேல் கால் பாகம் பச்சை பயிறு நிரப்ப வேண்டும். இதற்க்கு மேல் இருக்கும் கால் பாகத்தில் துவரம் பருப்பினை நிரப்ப வேண்டும்.
பரிகாரம் விவரம்
ஸ்வர்ண தோஷம் பரிகாரம் செய்வதற்கு நாம் வாங்கிய அனைத்து பரிகார பொருட்களையும் முருகன் கோவிலுக்கு கொடுக்க வேண்டும்.
எங்கள் முகநூல் பக்கத்தில் இணைந்திட இங்கே கிளிக் செய்யவும்
பரிகாரம் செய்யும் நாள் :
ஸ்வர்ண தோஷ பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் செவ்வாய் கிழமை தான் செய்ய வேண்டும். அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு பிரம்மமுகூர்த்தம் நேரத்தில் அதாவது அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் இந்த தானத்தினை செய்து விட வேண்டும்.
முக்கிய குறிப்பு :
நாம் செவ்வாய் கிழமை ஸ்வர்ண தோஷ பரிகாரம் செய்ய இருக்கின்றோம் என்றால் தேவையான பொருட்களை எல்லாம் திங்கள் கிழமை தான் வாங்க வேண்டும். திங்கள் கிழமை மாலை வேளையில் பரிகாரம் செய்ய இருக்கும் கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் பரிகாரம் செய்ய இருக்கின்றோம் என்பதை அறிவித்து இருக்க வேண்டும்.
1. பானையை கழுவி துடைத்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.
2. அதேபோல் தேங்காய்க்கும் வைக்க வேண்டும்.
3. அகல்விளக்கை கழுவி மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.
பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் :
1. அதிகாலையிலேயே குடும்பத்தில் இருக்கும் அனைவரும் குளித்து விட வேண்டும்.
2. பின்னர் பிரம்மமுகூர்த்த நேரத்தில் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
3. முருகன் பிரகாரத்தில் அமர்ந்து பானையில் பொருட்களை நிரப்பி தேங்காய் வைக்க வேண்டும்.
4. ஒரு தாம்பூலத்தில் வேட்டி , துண்டு , பூ , வெற்றிலை , பாக்கு மற்றும் வாழைப்பழம் வைத்து அர்ச்சகர் கையில் கொடுக்க வேண்டும். தானம் கொடுக்கும் முன் ஸ்வர்ண தோஷம் முழுவதும் நீங்கி விட வேண்டும் என்று நன்றாக பிராத்தனை செய்த பின் தானம் வழங்க வேண்டும்.
5. நாம் வாங்கி இருக்கும் ஆறு அகல்விளக்கில் திரி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சன்னிதானத்தில் ஏற்ற வேண்டும்.
6. பின்னர் யாருக்கு தோஷம் நீங்க வேண்டுமோ அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
7. திருநீறு , குங்குமம் வாங்கிக்கொண்டு கோவிலை 6 முறை சுற்றி வர வேண்டும்.
8. ஒரு ஐந்து நிமிடம் கோவிலில் அமர்ந்திருந்த பின் வீட்டிற்கு செல்லலாம்.
இந்த பரிகாரம் செய்து முடித்த பின்னர் நாம் தங்கம் வாங்கும் நிலை ஏற்படும். அப்படி வாங்கினாலும் அவை அடகு வைக்க போகாது. விற்கும் நிலையும் ஏற்படாது. தங்கம் சேமிக்கவே முடியவில்லை என்று நினைப்பவர்கள் மேற்கண்ட இந்த ஸ்வர்ண தோஷ பரிகாரம் செய்யும் போது பலன் கட்டாயம் கிடைக்கும்.