தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்: தமிழகத்தில் ஏகப்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது. மேலும் இந்த கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் தான் வினாத்தாள் வழங்கி வருகிறது.
தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு கடிவாளம்
அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் இயங்கி வரும் 116 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும். இந்நிலையில் இன்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தன்னாட்சி உரிமை பெற்ற கல்லூரிகளில் அந்த கல்லூரியே வினாத்தாளை தயாரித்து விடைத்தாள் திருத்தி, மதிப்பெண்களை வழங்கிக் கொள்ள முடியும் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. anna university autonomous colleges
Also Read: செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு – எந்தெந்த இடங்களில் தெரியுமா ?
இதனை தொடர்ந்து தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் நடத்தும் தேர்வுகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய இனி அனைத்து செமஸ்டர்களிலும் ஒரு பாடத்திற்கு மட்டும் அண்ணா பல்கலைக்கழகமே வினாத்தாள் தயாரித்து, தேர்வு நடத்தி, வினாத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண்களை வழங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு