ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!

அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம்: தமிழகத்தில் வாழும் பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப் மாதம் மகளிர் உரிமை தொகையை தொடங்கியது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதே போல் பெண்களுக்காக அரசு  கொண்டு வந்த முக்கியமான திட்டம்தான் ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம். இந்த திட்டம் மறைந்த அன்னை தெரசா நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் பெண்கள் திருமணத்திற்கு நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி 10-ம் வகுப்பு படித்த அல்லது படிப்பறிவில்லாத பெண் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் அந்த மணப் பெண்ணுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். அதேபோல், 12-ம் வகுப்பு படித்த அல்லது பட்டப்படிப்பு முடித்த அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ்  ரூ.50,000 உதவித் தொகை மற்றும் 8 கிராம் தங்க நாணயம்  வழங்கப்படும்.

Also Read: சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

மேலும் இந்த உதவித் தொகையை பெற வேண்டும் என்றால் திருமணத்திற்கு 40 நாட்கள் இருக்கும் முன்பே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மணமகள் 18 வயதையும், மணமகன் 21 வயதையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இ – சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

மணப்பெண்ணின் ஆதார் கார்டு, 10th – 12th – பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்ஃபர் சான்றிதழ், திருமண அழைப்பிதழ் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதரவற்றோர் என்பதற்கான சான்று அல்லது பெற்றோரின் இறப்பு சான்றிதழ் போன்றவைகள் தேவை.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *