மீண்டும் நடக்க இருக்கும் தேர்தல் – அண்ணாமலை கொடுத்த கோரிக்கை: தமிழகத்தில் நேற்று கிட்டத்தட்ட 36 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து பாஜக முக்கிய பிரமுகர் அண்ணாமலை கோவை தொகுதியில் தனது வாக்கு பதிவை பதிவு செய்தார். அப்போது அவரிடம் ஏராளமான மக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது வாக்குப்பதிவு பட்டியலில் தங்களுடைய பெயர் இல்லை என்று சுமார் 800 பேர் புகார் தெரிவித்தனர். இது குறித்து அண்ணாமலை அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனது தொகுதியில் ஒரே வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
குறிப்பாக சுமார் 1,353 வாக்குகள் உள்ள இடத்தில் 70 சதவீதம் அளவுக்கு வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாஜகவுக்கு அதிக வாக்குகள் இருக்கும் பல்லடம், சூலூர் என பல இடங்களில் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் கோவையில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர்களை இவ்வாறு நீக்கியுள்ளனர். இதில் அரசியல் முறைகேடு இருப்பது போல் சந்தேகம் எழுகிறது. எனவே கோவை தொகுதியில் மீண்டும் மக்களவை தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளருக்கு மனு மூலம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். இதனால் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.