
பொதுவாக ஆன்மீகவாதிகள், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி உள்ளிட்டவைகளை எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். இந்த பெயர்ச்சியின் மூலம் தங்களது வாழ்வில் ஏதேனும் முன்னேற்றம், மாற்றங்கள் ஏற்படாத என்று எதிர்பார்ப்பு நிலவக்கூடும்.
அந்த வகையில் இந்த ஆண்டு 2025ல் சனிப்பெயர்ச்சி வரும் இந்த மாதம் 29-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே இந்த குருபெயர்ச்சியை முன்னிட்டு எந்தெந்த ராசியினர் ராசி, நட்சத்திரங்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கும் என்று பல ஜோதிடர்கள் கணிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த ஆண்டு மார்ச் 29-ந் தேதி சனிப்பெயர்ச்சி இருக்குமா? இல்லையா? என்ற குழப்பமும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த குழப்பத்தை போக்கும் விதமாக சனீஸ்வர பகவானுக்கான பிரத்யேகமான கோவில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் | அப்பவே சம்பவம் பண்ண ராஜராஜ சோழன்!!
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பொதுவாக சனீஸ்வர பகவான் கோவிலில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி தான் குருபெயர்ச்சி குறிக்கப்படுகிறது. எனவே இந்த மரபு படி பார்த்தால் வருகிற மார்ச் 29ம் தேதி நிகழாது.
அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி நடக்கும். அது எப்போது என்று பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 29-ந் தேதி அன்று திருநள்ளாறு கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
Thirunallaru Temple – Click Here