தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை அனுஷ்கா. சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அவருக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனது. இருப்பினும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “Mrs.ஷெட்டி Mr.பாலிஷெட்டி” வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது “கத்தனார் – The Wild Sorcerer” படத்தில் நடித்து வருகின்றார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து 40 வயதாகும் இவருக்கு தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் பாகுபலி பிரபாஸை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை அனுஷ்காவுக்கும் பஞ்சாபை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவருடன் திருமணமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு அவர்களிடம் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.