மாணவர்களுக்கான APAAR அடையாள அட்டை: நாடு முழுவதும் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு அபார் – APAAR அடையாள அட்டை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எதற்கு இந்த அடையாள அட்டை என்று உங்களுக்கு ஒரு கேள்வி வரும்.
மாணவர்களுக்கான APAAR அடையாள அட்டை
எனவே இந்த அட்டை எதற்கு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆதார் கார்டில் இருக்கும் எண்கள் போன்று இந்த அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். இந்த கார்டு மூலம் மாணவர்களின் மதிப்பெண், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் அனைத்துமே இணைக்கப்பட்டு உள்ளது. one nation one id apaar card
மேலும் கடந்த சில வருடங்களாக போலி கல்வி சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலையை வாங்கி வாங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
மாணவர்கள் பள்ளி, கல்லூரி மாறுதல் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ID காண்பித்தாலே போதும் மாணவர்களின் முழு விவரம் குறித்து தெரிய வந்துவிடும்.
Also Read: பிரான்சில் ஒரு ஆணுறை 44 ஆயிரம் ரூபாயா? உலகின் மிக விலையுயர்ந்த கருத்தடை இது தான்!
எனவே இதன் மூலம் போலி கல்வி சான்றிதழ்களை பயன்படுத்தி யாராலும் வேலைக்கு சேர முடியாது. மேலும் அபார் என்றால், “தானியங்கு நிரந்தர கல்வி கணக்கு பதிவு” என்று அர்த்தம். அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் ஆதார் கார்டு மூலமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மோஹித் சர்மாவை கெட்ட வார்த்தையில் திட்டிய தோனி
பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை