அடுக்கு மாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைப்பு. யாருக்கு குறையும் யாருக்கு குறையாது போன்ற முழு விபரங்கள் காணலாம். மின் கட்டண குறைப்பானது தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.
அடுக்கு மாடி குடியிருப்புகளின் மின் கட்டணம் குறைப்பு ! தமிழக அரசு அறிவிப்பு !
முதல்வர் அறிவிப்பு :
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதிகளவில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்டது. இவைகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர குடும்பத்தினர். எனவே மின் பயன்பாட்டு கட்டணத்தினை குறைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். அதன் படி கடந்த மாதம் முதல்வர் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து மின் பயன்பாட்டு கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
யாருக்கெல்லாம் கட்டணம் குறைப்பு :
1. பத்து வீடுகள் அல்லது அதற்க்கு குறைவான வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.
2. மூன்று மாடி அல்லது அதற்க்கு குறைவான வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.
3. லிப்ட் வசதி இல்லாத அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு மின் பயன்பாட்டு கட்டணம் குறைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார்.
நாளை மின்தடை பகுதிகள் ( 1.11.2023 ) ! மாதத்தில் முதல் நாளே பவர் கட் … பெண்களே அலர்ட் !
கட்டண விவரம் :
1 யூனிட் மின் பயன்பாட்டு கட்டணம் ரூ. 8.50 ஆகும். தற்போது 1 யூனிட் மின் பயன்பாட்டு கட்டணம் ரூ. 5.50 என்று குறைந்துள்ளது.
இன்று முதல் அமல் :
அடுக்கு மாடி குடியிருப்புகளில் மின் கட்டணம் குறைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்ததன் படி இன்று முதல் மின் கட்டணம் குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மின் பயன்பாட்டு கட்டணம் குறைப்பு செயல்முறையின் படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பயனடைவர்.