ஏழை மாணவர்களின் உதவித்தொகைக்காக நடத்தப்படும் என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இருக்கும் ஏழை எளிய மாணவர்களின் மேல்நிலைக் கல்வி எந்தவித காரணத்தாலும் தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 6695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!
எனவே இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்களுக்காக, தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேர்வை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால், 9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!
அந்த வகையில் 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மாணவர்களின் நலன் கருதி என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜனவரி 29ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!
மகா கும்பமேளாவில் RCB ஜெர்சியை நனைத்த ரசிகர்.., எனக்கு வேற வழி தெரியலனே!!!
டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?
தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!