ஆன்லைன் ஓட்டுநர் உரிமம் 2024: நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைத்து ஓட்டுநர்களும் கண்டிப்பாக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்பது முக்கியம். அப்படி டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல், வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
தெளிவாக சொல்ல போனால், மோட்டார் வாகனச் சட்டம் 1998 ன் படி, நாட்டின் எந்த மூலையிலும் ஒருவர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி டிரைவிங் லைசென்ஸ் ஓட்டுனருக்கு அரசாங்க ஆவணமாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் ஓட்டுநர் உரிமம் 2024
மேலும் நாம் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு (RTO) போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று வாகனத்தை ஓட்டி காமிக்க வேண்டும். இப்படி இருக்கையில் சாலைப் போக்குவரத்து மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் குடிமக்களுக்கு ஆன் லைன் வசதியை வழங்கியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் அதிகரிப்பு – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!
கற்றல் உரிமத்திற்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. எனவே கற்றல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
- ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவார்கள் முதலில் sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelection.do என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அப்போது திரையில் ஒரு பட்டியல் தெரியும். அதில் உங்களுடைய மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் கற்றல் உரிமத்திற்கு விண்ணப்பிக்க விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதையடுத்து வாகனம் ஓட்டுநர் தொடர்பாக தேர்வில் 10 கேள்விகளில் ஆறு கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவும்.
- இந்த சோதனையை முடித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு உரிம இணைப்பு அனுப்பப்படும்.