சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2023. தமிழகத்தில் சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் மக்களின் பொது போக்குவரத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2023 ! மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு !
அதன் படி இங்கு காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருக்கின்றனர். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , கட்டணம் , விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ( Chennai Metro Rail Limited – CMRL ) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
General Manager ( Maintenance ) – பொது மேலாளர் ( பராமரிப்பு ) பணியிடங்கள் CMRLல் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு பொது மேலாளர் பணியிடங்கள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரத்துடன் இயங்கும் பல்கலைக்கழகங்களில் EEE / மெக்கானிக்கல் துறையில் BE அல்லது B.Tech பட்டம் பெற்றவர்கள் CMRLல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயதுத்தகுதி :
55 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் பொது மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2023 ! தேர்வு கிடையாது !
அனுபவம் :
பொது மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அரசு அல்லது தனியார் துறை நிறுவனங்களில் மேலாளர் பணியில் 20 ஆண்டுகள் அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பணியிடம் :
பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
20.10.2023 முதல் 18.12.2023ம் தேதி வரையில் CMRLல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 2 MB
2. பிறப்பு சான்றிதழ் / 10ம் வகுப்பு சான்றிதழ்
3. சாதி சான்றிதழ்
4. கல்வி சான்றிதழ்
5. அனுபவ சான்றிதழ்
6. பயோ டேட்டா
7. தகுதி சான்றிதழ்
8. 5 வருட ACR சான்றிதழ் போன்றவைகளை PDF முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
CMRLல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபப்ட்டு பணியில் நியமிக்கப்படுவர்.