சென்னையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025 க்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அன்றாட வாழ்வில் நம்முடைய உடற்தகுதியை பேணி காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையான பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வருடந்தோறும் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வருகிற ஜனவரி 10ம் தேதி காலை 05.30 மணி அளவில் ஆரம்பிக்க இருக்கிறது.
அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?
அதன்படி இந்த போட்டி சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகில் தொடங்கி நேப்பியர் பாலம், தீவுத்திடல், காயிதே இ மில்லத் பாலம் இடதுபுறம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் சுவாமி சிவானந்தா சாலை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் என்று முடிவடைய இருக்கிறது. இந்த போட்டியில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
- 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் – ஆண்கள் : 8 கி.மீ. – பெண்கள் : 5 கி.மீ.
- 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் – ஆண்கள் : 10 கி.மீ. – பெண்கள் : 5 கி.மீ.
மேலும் இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் வீதம் 4 பேருக்கு ரூ.5000 வழங்கப்படும். அதே போல் 2ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3000, 3ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/- மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.1000/- பரிசும், தகுதிச்சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை.., அலெர்ட்டா இருந்துக்கோங்க மக்களே!
இந்த போட்டியில் கலந்து கொள்ள நினைக்கும் வீரர் வீராங்கனை தங்களுடைய வயது சான்றிதழுடன் வருகிற 07.01.2025 வரை, மாவட்ட விளையாட்டு அரங்கம், நேரு பூங்கா, சென்னை-84 காலை 06.30 மணி முதல் மாலை 06.00மணி வரை முன்பதிவுகள் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?
மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?
TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!
ஜனவரி 2025ல் பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம்! பதவி ரேஸில் உள்ள முக்கிய புள்ளிகள்!