Home » செய்திகள் » அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா – சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனமா?

அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா – சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனமா?

அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா - சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனமா?

தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா: இன்றைய காலகட்டத்தில் என்னதான் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டாலும் கூட சில மனிதர்கள் மூடநம்பிக்கையில் அதிக நம்பிக்கை வைத்து வருகின்றனர். இதனால் சில மோசமான விஷயங்களும் அரங்கேறி வருகிறது. சொல்லபோனால் ஒரு கர்ப்பிணிக்கு பிரசவம் கூட நல்ல நேரம் பார்த்து தான் நடக்க வேண்டும் என்று சிலர் இப்பொழுது வரை பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த மூட நம்பிக்கையால் ஒரு பச்சிளம் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் வீரமுத்து. அவரின் மகளுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை பிறந்து கிட்டத்தட்ட  ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் குழந்தை சித்திரை மாதம் பிறந்ததால் உயிருக்கு ஆபத்து என்றும், கடன் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் யாரோ சொன்னதை நம்பி வீரமுத்து, அந்த பச்சிளம் குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு முக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் குழந்தை தண்ணீர் பேரலில் தவறி விழுந்ததாக நாடகம் ஆடியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா – crime news – murder news – tamilnadu latest news

இதுவரை இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்: முழுமையான விவரம்…!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top