அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Schools Holiday: அரியலூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை, தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பை கருதி சிறுத்தையை பிடிக்க 50 பேர் கொண்ட வனத்துறையினர், 45 கேமராக்கள், 7 கூண்டுகள், சிறப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அதே போல் தான் மயிலாடுதுறையில் சிறுத்தை இறங்கிய போது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து வனத்துறையினர்களிடம் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வரும் சிறுத்தை இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சுற்றுச்சுவரை தாவிக் குதித்த காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. இன்னும் வனத்துறையினரிடம் சிக்காமல் இருந்து வருவதால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.