தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆம்ஸ்ட்ராங் படுகொலை :
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வங்கியில் உணவு டெலிவரி செய்வது போல் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர். Armstrong murder case Police file 5000 page charge sheet
தலைமறைவு :
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் பாம் சரவணன், சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த வகையில் சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடியதாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இலவச ஸ்மார்ட்போன் திட்டம் – யாருக்கெல்லாம் தெரியுமா? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு !
குற்றப்பத்திரிக்கை தாக்கல் :
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது காவல்துறை தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 28 பேருடன், சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோருடன் சேர்த்து மொத்தம் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள் :
கர்நாடகாவில் என்ஜின் ஆயிலை குடித்து வாழும் நபர் – அதுவம் 25 வருசமா
ஹைதராபாத்தில் 200 கிராம் தங்கத்தில் செய்த புடவை
மஞ்சள் வீரன் படத்திலிருந்து TTF வாசன் நீக்கம் – இயக்குநர் செல்அம் அறிவிப்பு
உதயநிதியின் செயலாளராக பிரதீப் ஐஏஎஸ் நியமனம்? வெளியான தகவல்!