ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆருத்ரா தரிசன விழா:
புகழ்பெற்ற சிவாலய தலங்களில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன்படி இந்த வருடம் ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருகிற ஜனவரி 13ம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. எனவே நாளை ஜனவரி 4-ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்க இருக்கிறது.
ஜனவரி 13ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அதன்படி, இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா ஜனவரி 12 ஆம் தேதியும் மற்றும் ஆருத்ரா தரிசனம் 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு, வருகிற ஜனவரி 13ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை.., எவ்வளவு தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!
மேலும் , இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை ஆரம்பிக்க இருக்கும் நிலையில், அதற்கு முதல் நாள் லீவு விடபட இருப்பதால் கடலூர் மாவட்ட மாணவர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!
போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!
தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பவர் கட் ஏரியாக்களின் முழு தகவல்!
குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!