சிவன் பக்தர்கள் கவனத்திற்கு - சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி!சிவன் பக்தர்கள் கவனத்திற்கு - சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி!சிவன் பக்தர்கள் கவனத்திற்கு - சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி!

சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி – விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில். chathuragiri temple purattasi 2024

சதுரகிரி கோவிலில் அடுத்த 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி

இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து சிவனை வழிபடுவார்கள். அந்த வகையில் தற்போது புரட்டாசி மாத பிரதோஷத்தை ஒட்டி, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது.

எனவே இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள வருகிற செப்டம்பர் 15ம் தேதி முதல் செப் 18 ம் தேதி வரை அந்த 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர்.

Also Read: மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரம் – தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு !

மேலும் மலையேற தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதாவது, மலையேறும் பக்தர்கள் இரவில் அங்கேயே தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும் தீ பற்ற கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முதியோர் இல்லம்

ராமநாதபுரத்தில் விரைவில் கப்பல் சேவை

ஆன்லைனில் Dress வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

TANGEDCO வெளியிட்ட நாளை மின்தடை பகுதிகளின் விவரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *