சைலண்டாக வசூல் சாதனை படைக்கும் "மிஷின் சாப்டர் 1".., மொத்தம் இத்தனை கோடியா? தரமான கம்பேக் கொடுத்த அருண் விஜய்!!சைலண்டாக வசூல் சாதனை படைக்கும் "மிஷின் சாப்டர் 1".., மொத்தம் இத்தனை கோடியா? தரமான கம்பேக் கொடுத்த அருண் விஜய்!!

திரைத்துறையில் நுழைந்த காலத்தில் இருந்து தற்போது வரை போராடி நடித்து கொண்டிருக்கும் நடிகர் தான் அருண் விஜய். தற்போது இவர் நடிப்பில் மிஷின் சாப்டர் 1 திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி இப்பொழுது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மேலும் இப்படத்தில் அதிகமாக ஸ்டண்ட் காட்சிகள் இருந்த நிலையில், பல தடவை எலும்பு முறிவு, பலத்த காயம் ஏற்பட்டதாக அருண் விஜய் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மிஷின் சாப்டர் 1 படத்தின் மொத்த வசூல் விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அருண் விஜய் ஹீரோவாக நடித்த மிஷின் சாப்டர் 1 படம் வெளியாகி 17 நாட்கள் கடந்த நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் அருண் விஜய் தரமான கம்பேக் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செக்யூரிட்டியாக இருந்த ஷமர் ஜோசப்.., இப்போ சர்வதேச கிரிக்கெட் வீரர் – தூக்கிவிட்டு அழகுபார்த்த தமிழர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *