குட்டி அருந்ததி
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னர் பீக்கில் இருந்த நடிகை தான் அனுஷ்கா ஷெட்டி. அப்போது ரஜினி முதல் விஜய் வரை பல முன்னணி நடிகர் படத்தில் பிசியான நடிகையாக இருந்து வந்தார். தற்போது தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். அவருடைய சினிமா கெரியரில் மைல் கல்லாக அமைந்த ஒரு திரைப்படம் என்றால் அது கண்டிப்பாக அருந்ததி திரைப்படம் தான். திகிலின் உச்சத்துக்கே கொண்டு சென்ற இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற மொழிகளை தாண்டி தமிழில் நல்ல வசூலை இந்த படம் கொடுத்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன் பிறகு தான் வரலாற்று கதையில் அவர் சரியாக இருப்பார் என்று இயக்குனர்கள் பலர் அவர் வீட்டு வாசல் முன் காத்து கிடந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் குட்டி அருந்ததி கேரக்டரில் ஜக்கம்மாவாக கலக்கியவர் தான் நடிகை திவ்யா. இவரை சர்வ சாதாரணமாக யாராலும் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு அவருடைய துடிப்பான பேச்சும், கம்பிரமான நடிப்பும் அதிகமாக பேசப்பட்டது. அப்படி குட்டி அருந்ததியாக மிரட்டிய அவர், மளமளவென வளர்ந்து பெரிய ஜக்கம்மாவாக மாதிரி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பி[பார்த்த ரசிகர்கள் பிஞ்சு பழுத்திருச்சு என்று படத்தோட வசனத்தை கூறி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.