அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபான கொள்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் இருந்தபடியே ஆட்சி புரிந்து வருகிறார். இருப்பினும் அவரின் கைதுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆம் ஆத்மி கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசின் முடிவை எதிர்த்து இன்று பிரதமர் நரேந்திர மோடி வீட்டு முன் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில கன்வீனர் கோபால் ராய் பேசியதாவது, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று டெல்லி ஷஹீதி பூங்காவில் இருந்து ‘மக்கள் இயக்கம்’ தொடங்கும். மேலும் இந்த போராட்டத்தில் மோடி உருவ பொம்மைகள் எரிக்கப்படும். நேற்று ஹோலி என்பதால் இன்று பிரதமர் வீட்டை நாங்கள் முற்றுகையிடுவோம். மோடியின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இதனால் மோடி வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.