Breaking news அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்1 கடந்த மார்ச் 21 ஆம் தேதி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திகார் ஜெயிலில் இருந்து வந்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை பொது தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த அரவிந்த் கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து மீண்டும் சிறைக்கு சென்றார்.
மீண்டும் ஜாமீன் கேட்டு மனு அளித்த போதிலும் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் காலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமான தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த 2 நாட்களாக சிறையில் வைத்தபடியே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றத்தில் வைத்தே காலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.
இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற watsaap பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீனை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் பெரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இது தொடர்பாக ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்: நான்கு மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 !
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா
நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு
arvind kejriwal – delhi cm – cbi – police arrested
↩︎arvind kejriwal latest news