அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு: மதுபான கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் இருந்து வருகிறார். மேலும் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தற்போது இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சரத் ரெட்டி, ராகவ் மொகந்தா உட்பட பலருக்கு நீதிமன்றங்கள் இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதற்கு அமலாக்கத்துறை எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் டெல்லி முதல்வருக்கு மட்டும் பல எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதாவது, மதுபான கொள்கை விவகாரம் தொடர்பான கைது நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்து உத்தரவிட்டது. மேலும் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அசாதாரண சூழ்நிலையில் நீதிமன்றம் இருப்பதாக நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு