அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சில வாரங்களுக்கு முன்பு கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். இதை எதிர்த்து பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும் முதல்வர் பணியை அவர் சிறையில் இருந்தபடியே பொறுப்பாக பார்த்து கொண்டார். இதற்கிடையில் தற்போது மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதையடுத்து மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2ம் தேதி வரை ஜாமீன் கொடுத்திருந்தது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மேற்கொண்டு ஏழு நாட்கள் ஜாமீனை நீட்டிக்க கோரி மனு அளித்திருந்தார். இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஜாமீன் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு எடுக்க முடியும் என்றும், கண்டிப்பாக ஜூன் 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். Arvind Kejriwal latest news – delhi cm news
மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து.., 10 பேர் உயிரிழப்பு.., மீட்பு படையினர் தீவிரம்!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சைதை துரைசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி
பாம்பன் ரயில் தூக்கு பாலம் கப்பல்கள் செல்ல தடை!!
இந்திய அணியின் பயிற்சியாளர் பிரதமர் மோடி பெயரில் விண்ணப்பம்