அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு இருப்பது தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து தனக்கு எதிராக எந்த ஒரு விளைவு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கட்டாய நடவடிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுக்கக் கூடாது என்றும் அதற்கு நீதிமன்றம் உத்தரவு விட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அவருடைய வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் கிட்டத்தட்ட சுமார் 4 மணி நேரம் ரெய்டு நடந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது குறித்து பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.